கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள்…!samugammedia

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு  மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட  பகுதிகளில் உள்ள  11 பாடசாலைகளை  கொண்ட 200 வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் (31) வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு கிளிநொச்சி  கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள  அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான கட்டளை தளபதி  சுஜிவ கேட்டியாரச்சி, உயர் இராணுவ அதிகாரிகள், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், கண்டவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றேர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு தென்னை மற்றும் பழமரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *