பிரபாகரன் உருவாக பிக்குகளே காரணம்…! மைத்திரி ஆவேசம்…!samugammedia

பண்டாரநாயக்க – செல்வநாயகம் (பண்டா – செல்வா) ஒப்பந்தம் அமுலாக்கி இருந்தால் இந்த நாட்டில் பிரபாகரன் உருவாக்கி இருக்கமாட்டார்.பிரபாகரனை பிக்குகளே  உருவாக்கினார் என சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1956இல் சுதந்திரக்கட்சியின் ஆட்சியில் சிங்களமொழி அரசகரும மொழியாக்கப்பட்டது. இதற்கு வடக்கில் இருந்து எதிர்ப்புகள் வலுத்தன. சர்ச்சைகள் உருவாகின. அதன்பின்னர் தமிழ் மொழியும் அரச மொழியாக்கப்பட்டது.

செல்வா – பண்டா ஒப்பந்தத்தை அமுலாக்க முற்பட்டபோது இன்றுபோலவே அன்றும் மகாசங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பண்டாரநாயக்கவின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இறுதியில் குறித்த ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார். அந்த ஒப்பந்தம் அமுலாகி இருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்கமாட்டார். நாட்டில் போரும் ஏற்பட்டிருக்காது. எனவே பிக்குகளே பிரபாகரனை உருவாக்கினர். அதேபோல டட்லி-செல்வா ஒப்பந்தத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *