ராஜகுமாரி மரணம்: மேலும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது! samugammedia

வெலிக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ஆர். ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் மேலும் 03 காவல்துறை உத்தியோகத்தர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 2 சார்ஜன்ட்களும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பதுளை – நாவின்ன பகுதியைச் சேர்ந்த ஆர். ராஜகுமாரி என்ற பெண் கொழும்பு கொட்டா வீதியிலுள்ள வீடொன்றில் பணிப்புரிந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த மே மாதம் 11ஆம் திகதி உயிரிழந்தார்.

Leave a Reply