அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு திகதி குறிப்பு samugammedia

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 06, 07, 08 ஆகிய மூன்று தினங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்படுமென இன்று (01) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு செப்டம்பர் 8ஆம் திகதி பிற்பகல் நடைபெற உள்ளது.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (01) காலை பாராளுமன்றத்தில் கூடி எதிர்வரும் வாரத்திற்கான பாராளுமன்ற விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது.

Leave a Reply