அடேங்கப்பா…! நெல்சனுக்கு இப்படி ஒரு பரிசா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோட ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் நிலையில்,
திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முக்கிய பிரபலங்களுக்கு பல பரிசுகளை வாரி வழங்கி வருகின்றது.

நேற்று முன்தினம் (31-08-2023) அன்று ஜெயிலர் படத்தின் லாபத்தில் ஒரு பங்கை சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு கலாநிதி மாறன் செக் ஆக கொடுத்து இருந்தார். இதுமட்டுமா என பார்த்துக்கொண்டிருக்கும் போதே அடுத்த ட்விஸ்ட்டையும் கொடுத்தார் கலாநிதி மாறன்..

இரண்டு கார்களை நிறுத்தி அதில் ரஜினிக்கு எது பிடிக்குமோ அதை தெரிவு செய்யும்படி கோரியிருந்தார். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் BMW X7 காரை தேர்வு செய்து இருந்தார்.

“சூப்பர் ஸ்டாருக்கு கார பரிசாக கொடுத்தாச்சு, அப்போ டைரக்டர் நெல்சனுக்கு ஒண்ணுமே இல்லையானு” ரசிகர்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட,

சரி அடுத்த ட்விஸ்டும் வருகிறது என்று நேற்று (01-09-2023) நெல்சனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ்.

ஒரு கையில் செக் மற்ற கையில் கார் என நெல்சன் தெரிவு செய்த Porsche காரை கொடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.

 

Leave a Reply