சேற்றினுள் புதையுண்ட யானை..! வவுனியாவில் தொடரும் மீட்புப் போராட்டம்…!samugammedia

வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் சேற்றினுள் புதையுண்ட நிலையில் 05 வயது யானையினை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியிலே மாடு மேய்க்க சென்ற கிராமவாசி ஒருவர், புதையுண்ட நிலையில் யானை ஒன்று உயிருக்கு போராடுவதை அவதானித்திள்ளார்.
இதனையடுத்து மாமடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் யானையினை மீட்பதற்கான நடவடிக்கையினை வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸார், மற்றும் கிராமமக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *