யாழ் விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு!

மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் வலது பக்கம் திரும்பிக் கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, வீதியோரம் இருந்த தொலைபேசிக் கம்பத்தில் மோதியுள்ளார்.

சிறுமி படுகாயமடைந்த நிலையில் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவி

அத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாலையைச் சேர்ந்த 19 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post யாழ் விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply