2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நவம்பர் மாதம் நடைபெறும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சைக்கு இதுவரை 323,913 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நவம்பரில் நடைபெறவுள்ள பரீட்சைக்கான காரணங்களை முன்வைத்த கல்வி அமைச்சு, ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் உரிய நேரத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடத் தவறியமையே முன்னைய பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதத்திற்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.