மீட்டர் வட்டிக்காரர்களின் கொடுமை – பத்து மாத பெண் குழந்தையின் தாய் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு…! யாழில் சம்பவம் samugammedia

மீட்டர் வட்டிக்காரர்களின் கொடுமை காரணமாக யாழ்ப்பாணத்தில் 10 மாத பெண் குழந்தையின் தாய் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயாரான  யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தைச் சேர்ந்த ஜெயராஜா அருள்பாலினி (வயது- 34 ) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

மீட்டர் வட்டிக்கு பலரிடம் பணம் பெற்று பறவை விற்பனைத் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளதாகவும், கடனை திரும்ப செலுத்த தவறிய நிலையில் அவர்களினால் வீடு, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், வான் என்பன பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

மீட்டர் வட்டிக்காரர்களின் கொடுமையால் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த நிலையிலும் மீட்டர் வட்டிக்காரரின் அடாவடி அதிகரித்துள்ளது.

இவ்வாறான அடாவடித்தனத்தை தன்னால் பொறுத்துக் கொள்ள இயலாது எனவும் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் கணவனிடம் தெரிவித்துள்ளார்.

அவரின் இக்கருத்தை பொருட்படுத்தாத கணவன் இன்று (04) வெளியில் சென்று விட்டு பின்னர் வீட்டுக்கு வந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி காணப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்  விசாரணைகளை மேற்கொண்டார்.

Leave a Reply