முல்லைத்தீவு மத்திய கல்லூரி மாணவன் கணிதபிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம்! samugammedia

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் ஜதிவர்மன் முதலிடம் பெற்றுள்ளார்.

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.09) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் ஜதிவர்மன் 2ஏ, பி சித்திகளை பெற்று கணித பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் கணித துறையில் மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 1473 ஆவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது விருப்பப்படி கணித பிரிவில் கல்வி கற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளதாகவும்  இந்த நிலையை அடைய வழிகாட்டிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் என ஜதிவர்மன் தெரிவித்தார்.

Leave a Reply