உயர் பாதுகாப்பு வலயத்தில் மாணிக்க கற்கள் அகழ்வு…! நால்வர் கைது…!samugammedia

மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மஸ்கெலியா தேயிலை உற்பத்தி நிலையம் அருகில் உள்ள வீட்டில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வு இடம் பெற்று வருகிறது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவிற்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து  நேற்று 04 ம் திகதி இரவு அந்த இடத்தை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார உதவி அதிகாரி நுவான், சார்ஜன் ரெங்கரன், சார்ஜன் ஆரிய ரத்னா, பொலிஸ் நவஷாட் ,புத்திரன, ரத்நாயக்க ஆகிய பொலிசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது அந்த வீட்டில் உள் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொலிசார் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யபட்டவர்கள் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அந்த குடியிருப்பு உள் பகுதியில் உள்ள அறை ஒன்றில் சுமார் 40 அடி ஆழத்தில் பாரிய குழி உள்ளது எனவும்,  அந்த குழியில் இருந்து மாணிக்க கற்கள் அகழ்விற்கு உபயோகித்த ஆயுதங்கள் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply