சிறப்பாக நடைபெற்ற நல்லூரானின் திருக்கார்த்திகை திருவிழா! samugammedia

வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் 15ஆவது திருவிழா ஆகிய திருக்கார்த்திகை திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

06.09.2023 அன்று 16ஆவது திருவிழாவாக சூரியோதய திருவிழாவும்,09.09.2022 அன்று சந்தான கோபாலர் திருவிழாவும், மாலை திருக்கைலாச திருவிழாவும், 10.09.2023 அன்று வேல்விமானத் திருவிழாவும்,11.09.2023 அன்று தண்டயுதபாணிஉற்சவதிருவிழாவும் 12.09.2023 அன்று ஒருமுகத்திருவிழாவும், மாலை சப்பறத்திருவிழா,13.09.2023 அன்று இரதோற்சவமும்,14.09.2023 அன்று தீர்த்ததோற்சவமும் நடைபெற்று, மாலை கொடியிறக்கத்துடன் இனிதே திருவிழா நிறைவடையும்.

இன்றைய திருவிழாவில் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் பலரும் இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *