சீனப் பெருஞ்சுவரைச் சேதப்படுத்திய இருவர் கைது!

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரைச்  சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஷாங்கி மாகாணத்தில் உள்ள சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியில் இடைவெளி தென்பட்டுள்ளமையை அண்மையில்  அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து இது குறித்து பொலிஸார்  முன்னெடுத்த தீவிர விசாரணையின் போது சீனப் பெருஞ்சுவரை ஆண் , பெண் என இருவர் இணைந்து சேதப்படுத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

அத்துடன் குறித்த சுவரானது  சரிசெய்யமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இருவரையும் சீனப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட  சீனப்பெருஞ்சுவரானது உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக 1987 ஆம் வருடம் யுனெஸ்கோவால் இணைக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

Leave a Reply