பொதுச்செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்குமாறு மைத்திரிபால கேட்டிருந்தால் தான் அதனை விட்டுக்கொடுத்திருப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில் மாலை 4 மணிவரை நானும் எமது சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் ஒன்றாகவே இருந்தோம். கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.
ஆனால், இரவில் என் கழுத்தை அறுப்பார் என நினைக்கவில்லை. பொதுச்செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்குமாறு கட்சி தலைவர் கோரி இருந்தால் அதனை செய்திருப்பேன் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.