நிந்தவூர் வரலாற்றில் முதன் முறையாக வைத்திய துறைக்குத் தெரிவாகும் மாணவி!

நிந்தவூரின் வரலாற்றில் முதன் முறையாக வைத்தியத்  துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற சாதனை ஜனுசிகா குணசேகரம்  என்ற மாணவி படைத்துள்ளார்.

இந்நிலையில் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறையில் கால் பதிக்கும் ஜனுசிகாவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரீ.கலையரசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன் இந்நிகழ்வில் நிந்தவூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் சரிபுத்தீன், நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ அப்துல் கபூர், பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது,  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இம் மாணவி கல்வி பொது தராதர சாதாரண தரப்  பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் A சித்தி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply