தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பொது மலசலகூடத்திற்கு செல்வதற்காக ஒருவருக்கு அறவிடப்படும் கட்டணம் நேற்று (06) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பொது கழிப்பறையை ஒரே நேரத்தில் பயன்படுத்த 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.