இலங்கையில் புதிய கல்விமுறை தேவை என்பதுடன் மேலும் 10 புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதைப் பற்றியும் ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி சீவலி மத்திய வித்தியாலயத்தின் பாடசாலையின் மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர்.
இதன்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் ஜனாதிபதி பதிலளித்தார்.
“இன்றைய அரசியல் கட்சிகள் சரியில்லை என்று சிலர் கூறுகிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். குறைகள் உள்ளன.” என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
மாணவர்களில் ஒருவர் ஜனாதிபதியிடம், “கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில்;
“எங்களுக்கு இப்போது ஒரு புதிய கல்வி முறை தேவை. அதைப் பற்றி நாங்கள் விவாதித்து வருகிறோம். சுமார் 10 புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதைப் பற்றி ஆராய்ந்து வருகிறோம். அது நல்லது, இல்லையா? தொழில்நுட்பத்தைப் பற்றி நீங்கள் கற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. எனவே மாணவர்களும் இந்த திட்டத்திற்கு யோசனைகளை வழங்கலாம்.” எனவும் தெரிவித்தார்.