யாழில் சிறுமியின் கை விவகாரம் போராட்டத்தில் பதற்றம்!

கடந்த சில தினங்களுக்கு முன்னால் யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி இன்று கவனயீர்ப்பொ போராட்டம் முன்னெடுக்கபப்ட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு முன்பாக சிறுமியின் உறவினர்களால் இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்றமாக நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரால் பதற்றம்
போராட்டத்தில் சிறுமியின் உறவினர்களுடன் அரசியல் தரப்பினர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்துகொண்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் வாயிலை மறித்தும், வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண பொலிஸார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post யாழில் சிறுமியின் கை விவகாரம் போராட்டத்தில் பதற்றம்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply