முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் இன்ற இனம்காணப்படாத வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுடன் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்திய சாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மாங்குளம் நீதிபுரம் பகுதியை சேர்ந்த இருவரும் விறகு எடுப்பதற்காக சென்ற போதே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மாரிமுத்து மணியம் (84 ) என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த பார்த்தீபன் நிதர்சன் (06) எனும் சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.