ஓய்வு நிலை பொலிஸ் அதிகாரிக்கு கிளிநொச்சியில் இன்று கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டு பின்னர் தனியார் விடுதியில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் குணரத்ன கடமை புரிந்துள்ளார்.
இவர் பொலிஸ் சேவையில் இணைந்து 38 வருடங்களாக பல குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் பிரதானியாக கடமை புரிந்துள்ளார்.
இவர் தற்போது பொலிஸ் பணியிலிருந்து முற்றுமுழுதாக ஓய்வு நிலை பெற்று செல்கின்றமையால் இந்நிகழ்வில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு யாழ் மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி ஹெட்டியாரச்சி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொலிஸ் மா அதிபர் சமுத்திர ஜீவன் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.