மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலநகர் பகுதியில் வெடிக்காத நிலையில் செல் ரக குண்டொன்று காணப்பட்ட நிலையில் இன்று திருகோணமலை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர் துப்பரவு பணியை மேற்கொண்டிருந்த போது வெடிபொருள் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்தே இவ் செல் குண்டானது மீட்கப்பட்டுள்ளது.
குறித்த செல் ரக குண்டானது யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காது நிலத்தில் புதைந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.