மஹாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரன் கலாநிதி ராஜ்குமார் பாரதி யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.
அவருக்கான வரவேற்பு வைபவம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நேற்றையதினம் கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிலையில் பாரதியாரின் கொள்ளுப்பேரனின் வருகையை அடையாளப்படுத்தும் நினைவுச் சின்னத்தை வழங்கி கலாசாலை அதிபர்இ பிரதி அதிபர்கள் உள்ளிட்ட சமூகத்தினர் கௌரவித்தனர்.
அதேவேளை அதிதி அறிமுக உரையை விரிவுரையாளர் கு.பாலசண்முகம் ஆற்றியிருந்தார்.
இந்நிகழ்வில் கலாசாலை விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.