பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
அவ்வாறு இடை நிறுத்தம் செய்யபட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி அவரிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் உடன் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படி சம்பந்தப்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த கடிதத்தின் பிரதிகள் மாவட்ட செயலாளர், உதவி செயலாளர், நுவரெலியா உயர் நீதிமன்றம், நுவரெலியா நீதிமன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.