தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030′ என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நியதிகளுக்கமைய சவால்களை எதிர்கொள்வதற்கான மாற்று அணுகுமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக ‘பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030’ அவசியமாகும் என குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, இந்த மீளாய்வு மாநாட்டில் 2023 வரையான மற்றும் அதன் பின்னரான அணுகுமுறைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன.