வெள்ள அபாயம் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! samugammedia

கடும் மழையுடன் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளதாக அந்த பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, நிலவும் மழையினால் நில்வலா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் சிறு வெள்ளம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply