நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – மீப்பிலிமான பகுதியில் நபரொருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க எஸ்.சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சம்பவத்தில் கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காணி தகராறு காரணமாகவே இக் கொலை இடம்பெற்றுள்ளது என தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர் தற்போது தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுமென நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.