வடமாகாண ரீதியாக உள்ள கல்வி வலயங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் அதிக புள்ளிகளை பெற்று மன்னார் கல்வி வலயம் மாகாண ரீதியாக முதலாம் இடத்தை பெற்று சாதித்துள்ளது
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட மாகாண விளையாட்டு விழா நிகழ்வானது யாழ்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த 06.09.2023 செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து இன்று 10.09.2023 ஞாயிற்றுக்கிழமை 5 நாட்களாக நடைபெற்றது.
இதில் மன்னார் கல்வி வலயம் மொத்தமாக 720 புள்ளிகளை பெற்று , முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது வடமாகாண ரீதியாக விளையாட்டு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மைதானங்கள் என்பவறின் அடிப்படையில் வலுவான பல வலயங்கள் காணப்படுகின்ற போதும் உரிய பயிற்சி பெற சிறந்த மைதானம் கூட இல்லாத மன்னார் மாவட்ட மாணவர்கள் பல போட்டிகளில் புதிய சாதனைகளையும் படைத்து மாகாண ரீதியாக முதலாம் இடத்தையும் பெற்று வலயத்திற்கும் மாவட்டத்திற்கு ம் பெருமை சேர்த்துள்ளனர்.
அதே நேரம் மன்னார் மடு வலயமும் இம்முறை பல சாதனைகளை நிகழ்த்தி 5 வது இடத்தை தக்க வைத்துள்ளது.
மாகாண ரீதியாக தொடர்சியாக மன்னார் மாவட்ட பல சாதனைகள் நிகழ்த்தி வருகின்ற நிலையில் தேசிய ரீதியில் இம்முறை மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தி பல வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.