இலங்கையை கேந்திர மையமாக கொண்டு கிழக்கு ஆசியாவுக்கான எரிபொருள் விநியோக கட்டமைப்பை ஸ்தாபிக்கும் தீர்மானத்தை ஐக்கிய அரபு இராச்சியம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்கவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச உயர் மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் நடைப்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னரே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முழு உலகிற்குமான ஐக்கிய அரபு இராச்சியத்தின பரந்துப்பட்ட எரிபொருள் விநியோக கட்டமைப்பின் கிழக்கு ஆசியாவுக்கான விநியோகத்தை இலங்கையை கேந்திர மையமாக கொண்டு முன்னெடுக்கும் திட்டத்திற்கு முழுமையான ஆதரவை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் பெரும் எரிபொருள் களஞ்சியசாலையை ஸ்தாபிக்கவும், இங்கிருந்து கிழக்கு ஆசியாவுக்கான ஏற்றுமதிகளை நெறிப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீள் புதுப்பிக்கதக்க எரிசக்தி திட்டம், சுற்றுலா மற்றும் நட்சத்திர உணவக திட்டங்கள் தொடர்பிலும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை விவசாயத்துறையை நவீனமயமாக்கவும், இலங்கைக்கான எமிரேட்ஸ் விமான சேவைகளை அதிகரிக்கவும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தங்களை விரைவில் கைச்சாத்திட இருதரப்புக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.