பிரசித்தி பெற்ற லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயத்தின் 22வது மகோற்சவப் பெருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
இத் தேர் திருவிழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டிருந்தார்.
வருடா வருடம் புகழ்பெற்ற, நாதஸ்வரம் மற்றும் தவில் வித்துவான்களின் இசை வாத்தியங்கள் முழங்க இடம்பெற்றுவரும் இத்திருவிழாவில பிரபல ஆன்மீக அறிஞர்களின் பிரசங்கங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.