தொடரும் குழப்பநிலை…! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவின் முக்கிய கூட்டம் இன்று…!samugammedia

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளதுடன் இன்றைய கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வாரம் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டதையடுத்து கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அவரது பதவி நீக்கத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் மாற்று கட்சி எம்.பிக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (11) மத்திய குழு ஒன்று கூடவுள்ளது.

கட்சியில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதோடு, இது தொடர்பான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதிகள் மற்றும் மாவட்ட சபைகளை வலுப்படுத்தும் வகையில் அடிமட்ட மட்டத்தில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இன்று நடைபெறும் மத்திய குழுவில் இது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னணிக் கூட்டணி அல்லது முன்னணியின் வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என கட்சிக்குள் கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ளதாகவும், அது தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச எதிர்ப்பு அலையை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்லக்கூடிய பலம் வாய்ந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் அதனால்தான் எதிர்வரும் காலங்களில் கட்சிகளை இணைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

Leave a Reply