நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை முருகனை போல அலங்காரமிட்டு கையில் மாம்பழத்துடன் குழந்தையொன்று காட்சியளித்ததுடன் அங்கிருந்த பக்தர்களின் கவனத்தை தன்பால் ஈர்த்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவில் இன்றுகாலை தெண்டாயுதபாணி உற்சவம் என அழைக்கப்படும் மாம்பழ திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இன்று (11) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்த அடியார்களின் அரோகரா கோஷத்துடன் பிள்ளையாரும் முருகப்பெருமானும் வெளிவீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் இன்று காலை நல்லூர் ஆலய முன்றலில் முருகப்பெருமான் போன்று அலங்கரித்து கையில் மாம்பழத்தை வைத்திருந்தவாறு குழந்தையொன்று மாம்பழத்திருவிழாவினை பார்த்து ரசித்ததுடன் குறித்த குழந்தையின் படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றம குறிப்பிடத்தக்கது.