சணல் 4 ஆவண படத்தில் பல உண்மைகள் பல உண்மைகள் வெளி வருகின்றன- சர்வதேச விசாரணை வேண்டும்- ஸ்ரீதரன் எம்.பி கோரிக்கை! samugammedia

சணல் 4 ஆவண படத்தில் பல உண்மைகள் வருவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் எம். பி தெரிவித்துள்ளார். 

இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். 

 குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையில் புதிய விடயமாக முன்வைக்கப்பட்டிருக்கும்  இந்த சனல் 4 வினூடாக வெளி வந்திருக்கின்ற கோட்டபாய அரசாங்கத்தின் காலத்தில் தான்  ஜனாதிபதியாக வருவதற்காக கத்தோலிக்க மக்களை கொலை செய்து அந்த கொலையினூடாக எவ்வாறு  ஜனாதிபதியாக கோட்டபாஜ வந்தார் என்பதை வெளிப்படுத்தும் பெரும் ஆவணமாக  மிகப்பெரும்  இனப்படுகொலையின் அடையாளமாக  சனல் 4 தன்னுடைய ஆவனத்திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. 

இந்த ஆவண திரைப்படத்தினூடாக பல்வேறு பல  உண்மைகள் வெளி வருகின்றன. இது எங்களுடைய கருத்துப்படி எவ்விதமான இடர்பாடுகளுமின்றி இதற்கான தயவு தாட்சனியமின்றி ஒரு நேரடியான நீதி கிடைக்க கூடிய வகையில் அமையவேண்டும் என்பது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இலங்கை தமிழரசுக்கட்சியும் தமிழ் தேசிய சக்திகளினுடைய கோரிக்கை. 

சிவநேசதுரை  சந்திரகாந்தன் சர்வதேச விசாரணையை கேட்கிறார்.  இங்கே நடை பெறுகிறது என்னவென்றால் கோழி பிடித்த கள்வனும் கூட இருந்து தேடுவது போல என்ற பழமொழியை தான்  நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது. 

ஆகவே யார் களவெடுத்தார்கள், யார் கொள்ளை அடித்தார்கள், யார் கொலைகளை செய்தார்கள் அவர்களே சொல்ல்கிறார்கள் நீங்கள் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என்று. 

இந்த நாட்டினுடைய கர்தினாலாக இருக்கும் மால்கம் ரஞ்சித் ஆண்டகை கூட தமிழர்களுக்கு இதங்கு   ஒரு இனப்படுகொலை நடைபெற்றது. அவர்கள் போர் குற்றத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர் ஒருகாலமும் ஏற்று கொள்ளவில்லை. மன்னார் பேராயர் ரஜப் ஜோசப் அவர்கள் அந்த கோரிக்கையை முன்வைத்த காலத்திலே அவர் நிராகரித்த காலங்களும் உண்டு.

ஆனால் இன்று அவருடைய திருவாயால் நடை பெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என தெரிவித்துள்ளார். நாங்கள் அந்த சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கருத்தில் எதிர்மனப்பாங்கை கொண்டிருக்க வேண்டும் அது நடத்தப்பட வேண்டும். 

இந்த நாட்டுக்குள் நீதியான தீர்வு வராது.  ஜனாதிபதி ஒரு குழுவை அமைத்தால் அந்த குழு படுத்துறங்கும் அதற்கு பிறகு வேறு ஒரு குழுவை அமைப்பார்கள். 

எவ்வாறு யுத்தம் முடிந்தஹ் பிறகு LLRC என்ற குழு உருவாக்க பட்டதோ பிறகு எவ்வாறு பரணவிதான தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.  பிறகு இப்போது குழுக்கள் பற்றி பேரசுகிறார்கள் இந்த நாடு குழுக்கள் அமைத்து  குழுக்கள் அமைத்து குழுக்களுக்குரிய நாடக இருக்குமே தவிர ஒரு காலமும் தீர்வுகிடைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *