பட்டதாரியான காதலியைத் தாக்கிக் கொன்ற காதலன்..! விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல் samugammedia

எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து காதலன் தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளாகி  வத்துபிட்டிவல  போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த காதலி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்  விவசாய பட்டதாரியான குருணாகல் ரிதிகம பிரதேசத்தில் வசிக்கும்  28 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

காதலியை தாக்கிய காதலன் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான காதலி வேறு ஒரு இளைஞருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த சந்தேகத்தின்  அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply