தேர்தலுக்கு தயாராகும் ரணில் தரப்பு…!சிறிகொத்தாவில் இன்று முக்கிய கூட்டம்…! samugammedia

இலங்கையில் பிரதான அரசியற் கட்சிகள்  பலவும் எதிர்வரும் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை தற்போது மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்த யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்றையதினம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் நாட்டில் நிலவும் அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்த யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply