யாழில் உள்ள ஆலய பகுதியில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்த முதியவர் உயிரிழப்பு…!samugammedia

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய சூழலில் கடந்த முப்பது வருடங்களாக வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் ஆலய சூழலிலேயே உயிரிழந்துள்ளார்.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாக உள்ள நிலையில் அங்கிருந்து யாசகர்களை அகற்றும் செயற்பாட்டை ஆலய நிர்வாகம் மேற்கொண்டிந்த நிலையில் அங்கிருந்து செல்ல மறுத்த குறித்த முதியவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சுட்டியபுலம் வசாவிளானைச் சேர்ந்த முருகன் தியாகு (வயது-76) என்ற வயோதிபரே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழ்ந்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு இடம் பெற்ற வலிகாமம் இடப்பெயர்வின்போது காலொன்றை இழந்த நிலையில் உறவினர்களுடன் செல்ல விரும்பாத அவர் வடமராட்சி வல்லிபுர ஆழ்வர் ஆலய சூழலில் வாழ்ந்து வந்த நிலையில் அவர் இன்று முற்பகல் ஆலய சூழலிலே உயிரிழந்துள்ளார்.

Leave a Reply