ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி! samugammedia

தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இதன்படி, பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்து சேவைகளும், தொடருந்து பாதைகள் மூலமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்து பேணுதலும் அத்தியாவசிய செயற்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply