திருகோணமலை வீதியை மறித்து மீனவர்கள் போராட்டம்! samugammedia

திருகோணமலை மாவட்டத்தில்   176  பேருக்கு வழங்கப்பட்ட சுருக்கு வலை அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி இன்றைய தினம் (13) வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை சிறிமா ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் திருக்கடலூர் வழியாக ஏகாம்பரம் வீதியூடாக வந்து திருகோணமலை- கண்டி பிரதான வீதியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னாள் பதாகைகளை ஏந்தியவாறு வீதியில் அமர்ந்த வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடல் வளம் அழிந்து போவதாகவும், மீனவர்களின் தொழில் அற்று போய் வருவதாகவும், அரச  அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் தெரிந்திருந்தும் எதுவித சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply