பிரித்தானியாவில் புறாக்களின் எச்சத்தால் சுழப்பட்ட வீடு!

பிரித்தானியாவில் லண்டன் நகரில் உள்ள வீடொன்று புறாக்களின் எச்சத்தால் சேதமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளர்,  வாடகைக்குக் கொடுத்த தனது வீட்டை பார்வையிடச் சென்றுள்ள நிலையில் அவ்வீடு முழுவதும் புறாக்களின் எச்சத்தால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தவர்கள் அவ்வீட்டை வீட்டுவிட்டுச் சென்றுள்ள நிலையிலேயே  புறாக்கள் அவ்வீட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீட்டைத் தூய்மைப்படுத்த அதன் உரிமையாளர், பூச்சிக்கொல்லி நிறுவனம் ஒன்றை அணுகியதாகவும், அந்நிறுவனம் வீட்டை முழுமையாக  சுத்தம் செய்ய  26,000 அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் இப் பணியை  முடிக்ககிட்டத்தட்ட ஒரு மாதம் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

புறாக்களின் எச்சம் வலுவான எஃகுப் பாலங்களைக்கூட அரிக்கும் தன்மை கொண்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply