முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
குறித்த அகழ்வாய்வின் போது ஆறு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று ஏழாவது நாள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏழாவது நாள் அகழ்வாய்வுகள் இன்று (13) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் , தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதுவரை துப்பாக்கி சன்னங்கள், தமிழ் விடுதலை அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள், கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.