மாற்றுத்திறனாளி நபர்களின் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் வழங்கி வைப்பு! samugammedia

முல்லை மலர் அபிவிருத்தி அமைப்பினால் பயனாளிகளுக்கு வாழ்வாதார சுழற்சி முறை கடன் திட்டம் இன்றைய தினம் முல்லைத்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி நபர்களின் நிலையான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு மாற்றுத்திறனாளி  நபர்களை சமூக மட்ட புனர்வாழ்வுக்குட்படுத்தும் நிகழ்ச்சி 03 திட்டத்தின் கீழ் childfund நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் voice மற்றும் orhan நிறுவங்கள் இணைந்து முல்லை மலர் அபிவிருத்தி அமைப்பின் ஊடக 130 பயனாளிகளுக்கான வாழ்வாதார சுழற்சி முறை கடன் வழங்கும்  திட்டம் இன்றைய தினம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மணிவண்ணன் உமாமகள், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர், கிராம சேவையாளர்கள், நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு  முல்லை மலர் அபிவிருத்தி அமைப்பினால்  வாழ்வாதார சுழற்சி முறை கடன் திட்டம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.


Leave a Reply