பலரையும் வியக்க வைத்த வெளிநாட்டு ஜோடியின் திருமணம்

திருகோணமலையில் இடம்பெற்ற வெளிநாட்டு ஜோடியொன்றின் திருமணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இத் திருமணம் கடந்த வியாழக்கிழமை (07) திருகோணமலை சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் நடந்தேறியுள்ளது.

உருத்திராட்சத்தை அணிவித்து திருமண பந்த உறுதி

இத் திருமண பந்தத்தில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு தம்பதியினர் இணைந்து கொண்டனர்.

திருமண நிகழ்வில் சிவ பணியில் உள்ள இரெத்தினம்பிள்ளை கலியுகவரதனை சிவநெறி முறையில் குருவாக ஏற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதன்போது சட்ட ரீதியான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டன.

அதேவேளை புதுமணத் தம்பதியினருக்கு பரிசாக சிவலிங்கம் ஒன்று வழங்கப்படுவதோடு, மணமகனால் மணமகளுக்கும், மணமகளால் மணமகனுக்கும் உருத்திராட்சத்தை அணிவித்து திருமண பந்த உறுதி செய்தனர்.

அதேவேளை இதுபோல எட்டு திருமணங்கள் இதுவரை நடத்தி வைக்கப்பட்டதாகவும் சிவ பணியில் உள்ள கலியுகவரதன் தெரிவித்தார்.

The post பலரையும் வியக்க வைத்த வெளிநாட்டு ஜோடியின் திருமணம் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *