சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதற்கு நான் சூழ்ச்சி செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து கடந்த வாரம் கட்சியின் தவிசாளரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பதவி நீக்கம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றேன். நெருக்கடியான காலத்தில் கட்சியுடன் இருந்தேன். கட்சிக்காக உழைத்தேன்,ஆனால் கட்சித் தலைமையிடம் சிலர் கோள்மூட்டியுள்ளனர்.
தலைமைப் பதவியை கைப்பற்றும் திட்டம் என்னிடம் இல்லை. அப்படியான துரோக அரசியலில் ஈடுபட்டதும் கிடையாது எனவும் தெரிவித்தார்.