இரயில் பயணிகளை விருந்தினர்களைப்  போல நடத்துங்கள்! ஜனாதிபதி அறிவுரை

இரயில் பயணிகளை விருந்தினர்களைப்  போல நடத்துங்கள்” என இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை புகையிரதத் திணைக்கள அதிகாரிகளை அறிவுறுத்தியள்ளார்.

இந்திய இரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த இளம்  அதிகாரிகள் 255 பேரை அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது”தேசத்தின் உயிர்நாடியாக இரயில்வே உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை தாங்கிச்  செல்லும் வாகனமாக இரயில்கள் உள்ளன.

அதேநேரம், இந்திய பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, நாட்டின் ஒற்றுமை மற்றும் சமூக கலாசார பன்முகத்தன்மைக்கும் இரயில்வே முதுகெலும்பாக உள்ளது.

எனவே இந்திய இரயில்வே திணைக்களத்தை  உலகின் சிறந்த தரமான சேவைகளை வழங்கும் திணைக்களமாக மாற்றப் பாடுபடுவது உங்களை போன்ற இளம் அதிகாரிகளின் பொறுப்பாகும்.

இரயிலில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணத்தின் நினைவுகளை எடுத்துச்செல்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பை அனைத்து வழிகளிலும் உறுதி செய்ய வேண்டும்.

பயணிகளை உங்கள் விருந்தினர்களாகக் கருதி, அவர்கள் போற்றும் வகையில் சிறந்த சேவை மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்குமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை அதிகரிக்க நீங்கள் உழைக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *