தலைமன்னார் கடலில் காணாமல் போன மீனவர்கள் இந்தியாவில் கரையொதுங்கினர்…!samugammedia

தலைமன்னார் கடலில் காணாமல் போன இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தலைமன்னாரில் இருந்து கடந்த 12ஆம் திகதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் கரைக்கு திரும்பாத நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் இன்று காலை தமிழகத்தின் கோடியக்கரை பகுதியில் குறித்த மீனவர்கள் இருவரும் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.

ஜோசப் நிக்சன் டீலக்ஸ் மற்றும் தேவசகாயம் சுமித்திரன் ஆகியோரே இவ்வாறு கோடியக்கரையில் கரையொதுங்கியுள்ளனர்.

Leave a Reply