நாளொன்றுக்கு 10000 ரூபா சம்பாதிக்கும் யாசகர்

  இலங்கையில் நாளொன்றுக்கு 10000 ரூபா சம்பாதிக்கும் பிச்சைக்காரன் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

காலி – களுவெல்ல பிரதேசத்தில் 120 மில்லிகிராம் போதைப்பொருளுடன் யாசகர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில், நாளாந்தம் 8000 முதல் 10000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக தெரியவந்துள்ளது.

போதை மற்றும் மதுவுக்கு அடிமையானவர்

42 வயது மதிக்கத்தக்க இந்த யாசகர் , போதை மற்றும் மதுவுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் இராணுவத்தில் கடமையாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் தனது காலை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த யாசகர் தனது நாளாந்த வருமானத்தில் 3000 ரூபாவை வங்கியில் வைப்பு செய்துவிட்டு தினமும் முச்சக்கர வண்டியில் சென்று சட்டவிரோத மதுபானம் அருந்துவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த இவர் திருமணமானவர் எனவும் இரண்டு பிள்ளைகளின் பராமரிப்புக்காக மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த 80 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

The post நாளொன்றுக்கு 10000 ரூபா சம்பாதிக்கும் யாசகர் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *