இலங்கைக்கு வரவுள்ள 600 வைத்தியர்கள்…! வழங்கப்பட்ட அனுமதி…!samugammedia

தங்போது வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வரும் சுமார் 600 வைத்தியர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் இலங்கை வந்தவுடன் பணிக்கு திரும்ப முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை 65 வருடங்கள் வரை அரச சேவையில் நீடிக்க அனுமதி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத் துறையில் நிலவும் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply