மக்களுக்கு பேரிடி…! மீண்டும் அதிகரிக்கப் போகும் எரிபொருள் விலை…! samugammedia

இம்மாத இறுதியில்  மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உலக சந்தையில் மசகெண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் இந்தியாவுக்கு செலுத்தப்பட வேண்டிய கடன்தொகைக்கான அறவீடு உள்ளிட்ட காரணங்களால் இம்மாத ஆரம்பத்தில் இலங்கையில் எரிபொருள் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இம்மாத இறுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.

அதேவேளை, கடந்த மாதம் 80 டொலருக்குள் இருந்த மசகெண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 90 டொலர்களை கடந்துள்ளது. இம்மாத இறுதியில் மசகெண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையிலும் அடுத்த மாத ஆரம்பத்தில் எரிபொருள் விலைகளை கணிசமாக அதிகரிப்பது குறித்து, எரிசக்தி அமைச்சு இப்போதே சிந்திக்க ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை எரிபொருள் விலை தொடர்பான தீர்மானம் இம்மாத இறுதி அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply