நல்லூரில் கடமையாற்றிய சாரணர்கள் மற்றும் பொலிஸாருக்கு கௌரவிப்பு! samugammedia

நல்லூர் உற்சவ காலத்தில் கடமை ஆற்றிய பொலிசார் மற்றும் சாரணங்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாங்க மகோற்சவம்  கடந்த 21 ம் திகதியிலிருந்து ஆரம்பமாகி இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில்  உற்சவ காலங்களில் பாதுகாப்பு கடமை மற்றும் வீதி தடைகளில் கடமையாற்றி, உற்சவ காலத்தில் பக்தர்கள் கந்தனை வழிபடுவதற்கு ஒத்துழைத்த பொலிசார் மற்றும் சாரணர்களை மதிப்பளிக்கும்  நிகழ்வு இன்றைய தினம் நல்லூர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது 

இன்று காலை உற்சவ காலத்தில் கடமையாற்றியவர்களுக்காக விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று காளாஞ்சியும்  கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர், யாழ்ப்பாணமாவட்ட சாரண சங்கத் தலைவர்  பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply