ஆளுந்தரப்பு கட்சிகள் அவசர தீர்மானம்! மக்கள் சார்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் samugammedia

 

பொருளாதார பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விசேட கோரிக்கையை முன்வைக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் மஹஜன எக்சத் பெரமுன ஆகிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் மஹஜன எக்சத் பெரமுன என்பன இணைந்தே இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளன. 

பொதுஜன பெரமுன அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் பெசில் ராஜபக்ஷவின் தலைமையிலும் மஹஜன எக்சத் பெரமுன பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலும் அண்மையில் கலந்துரையாடியிருந்தன. 

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். அதன் காரணமாக அவர்களுக்கான நிவாரணத்தை கொடுக்கும் வகையில் ஏதாவதொரு வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்கவேண்டும் என்று இருக் கட்சிகளினதும் தலைவர்களும் ஏகமனதான தீர்மானத்துக்கு வந்துள்ளனா்.

Leave a Reply