தியாகதீபம் திலீபனின் இரண்டாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல் யாழ் பல்கலையில் அனுஸ்டிப்பு…!samugammedia

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று(16) பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் முன்னிலை வகிக்க, கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ.நெவில்குமாரின் வழிகாட்டலில் இரண்டாம் நாள் நினைவேந்தல்கள் மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

மேலும், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜெ.அருண் மற்றும் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சி.அபிரக்சன் ஆகியோரது பங்குபற்றுதல்களுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஆளணியினர், ஊடகவியலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply